வல்லவாழ்

மலைநாட்டுத் திருப்பதியாகிய இது இன்று திருவல்லா எனச் சுட்டப்படுகிறது. கோட்டயத்தின் அருகில் உள்ளது. திருமங்கை யாழ்வாரும், நம்மாழ்வாரும் இவ்விடத்தின் சிறப்பினை நன்கு எடுத்துரைக்கின்றனர். திருமால் கோயில் கொண்ட இவ்விடத் தின் செழிப்பையும், சிறந்ததொரு ஊராக இது திகழ்ந்ததனையும்
தேனார் சோலைகள் சூழ் திருவல்ல வாழுறையும் நாலா -2612
மாடுயர்ந்தோமப்புகை கமழும் தண் திருவல்ல வாழ
நீடுறைகின்ற பிரான் – நாலா -2614
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதணவும் தண் திருவல்லவாழ் – 2615
எனப்பாடும் நிலை தருகிறது.