இன்று சென்னை மாவட்டத்தில் பாடி என்று வழங்கப்படும் ஊர் இது. ஊர்ப்பெயர்க் காரணம் தெரியவில்லை. சம்பந்தர் இத் தலத்து இறைவனைப் பாடியுள்ளார்.
கடலின் நஞ்சமதுண்டு இமையோர் தொழுதேத்த நடமாடி
அடலிலங்கை யரையன் வலிசெற்றி அருளம்மானமர் கோயில்
மடலிலங்கு கமுகின் பலவின்மது விம்மும் வலிதாயம்
உடலிலங்கு உயிர் உள்ளளவுந் தொழவுள்ளத் துயர்போமே -3-8