இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும்பள்ளம் என்னும் பெயரால் சுட்டப்படும் ஊர் இது. மகாவிஷ்ணு இறைவனைப் பூசித்து வலம்புரிச் சங்கு பெற்ற இடம் இது. இது கடற்கரைத் தலமாக இருந்தது என்பதனை, சுந்தரர்.
பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினியவன் றமர்க்கினியவன் எழுமையும்
மனக்கிளியவன் றனதிடம் வலம்புரமே’ எனப்பாடும் தன்மை காட்டுகிறது. திருநாவுக்கரசர்,
மண் மலிந்த வயல் புடைசூழ் மாடவீதி வலம்புரம் – 272-1
மங்குன் மதிதவழு மாடவீதி வலம்புரம் – 272-9
என்றும், சம்பந்தர்.
வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகர் – 362-1
வற்றறியாப் புனல்வாய்ப் புடைய வலம்புர நன்னகர் – 361-5
என்றும் இந்நகரினைச் சித்தரிக்கின்றனர்.