வலஞ்சுழி

திருவலஞ்சுழி என்றழைக்கப்படும் மாவட்டத்தில் உள்ளது. இவ்வூர் தஞ்சாவூர் பிலத்திற் சென்ற காவிரி வெளிப்படுவதற்காகத் தம்மை ஏரண்ட முனிவர் பலிதர, அது மேலே வந்து வலமாகச் சுழித்துக் கொண்டு சென்றதால் ஊருக்குத் திருவலஞ்சுழி என்று பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது என்பது இத்தலப் பெயர் பற்றிய விளக்கமாக அமைகிறது. எனினும் பக்கத்தில் ஓடும் அரிசிலாறு கொண்டு நோக்க. இதனுள் நீர் வலத்தில் சுழித்துக் கொண்டு ஓடிய காரணத்தால் இவ்விடம் முதலில் வலஞ்சுழி எனச் சுட்டப்பட்டு, பின்னர் ஊர்ப்பெயராகவும் அமைந்ததோ எனத் தோன்றுகிறது. சம்பந்தர், அப்பர், இவ்வூரில் உள்ள இறைவனைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.
முழுமணித் தரளங்கள் மன்னு காவிரி சூழ் திருவலஞ்சுழி திருநா – 242-2
கிண்ண வண்ண மலரும் கிளர் தாமரைத் தாதளாய்
வண்ண நுண்மணன் மேலனம் வைகும் வலஞ்சுழி -138-3
சேக்கிழார். பிரசமென் மலர் வண்டறை நறும் பொழில் திரு வலஞ்சுழி (திருஞா-328) என இதனைச் சுட்டுகின்றார்.