இப்பாட்டியல் நூல் மங்கலப் பொருத்தத்தினை மாத்திரம் தனதுநூற்பொருளாக வரையறுத்துக் கொண்டமையால் இப்பெயர்த்தாயிற்று. சூத்திரம்கட்டளைக் கலித்துறை யாப்புப் பெறுகிறது. சம்பந்த முனிவரால்இயற்றப்பட்டமை யின் இது சம்பந்தர்பாட்டியல் எனவும் படும். இப்பெயர்பெற்றது என்ப. அன்றி ஞான சம்பந்தப் பெருமான் இவருடைய வழிபாட்டுக்குரவராதலும் கூடும். நூலாசிரியர் பெயர் துணியக் கூடவில்லை. காலம்14ஆம் நூற்றாண்டு எனலாம். இன்ன இன்ன மங்கலமொழிகள் இன்ன இன்னமுதலெழுத்தில் தொடங்கும் பெயரையுடைய பாட்டுடைத் தலைவனுக்கு உரியன என்றசெய்தியை 9 பாடல் களிலும், ஏனைய பொருத்தங்களைப் பொதுவாக இறுதிப்பாடலாகிய பத்தாம் பாட்டிலும் இந்நூல் குறிப்பிடுகிறது.இனி, வரையறுத்த பாட்டியல் சுட்டும் மங்கலமொழிகளும், அவற்றுக்குஏற்ற, பாட்டுரைத் தலைவனுடைய பெயரின் முதலெழுத்துக்களும் வருமாறு :(கா. 4 – 9)