வல்லினமெய்யும் அதனைச் சார்ந்த மெல்லின மெய்யும் வருக்கமாம்.இடையினத்துக்கு வருக்கம் அஃதாவது இன வெழுத்து இல்லை. கங சஞ, டண, தந,பம, றன – எனப் பிறப்பிடத்தான் ஒத்து முயற்சியில் சிறிது மூக்கொலியான்வேறுபடும் மெல்லினங்கள் அவ்வவ் வல்லெழுத்துக்கு இனமாகி வருக்க எழுத்துஎனப்பட்டன. (வீ.சோ.சந்திப். 2)(ககர மெய்யினை ஊர்ந்துவரும் பன்னீருயிரெழுத்துக்களும் ககரவருக்கமாம். இவ்வாறே ஏனைய மெய்யினை ஊர்ந்து வரும் பன்னீருயிரெழுத்துக்களும் அவ்வம் மெய்வருக்கமாம். இவ்வாறு வருக்கம்அவ்வம்மெய்யெழுத்துக்களைச் சார்ந்த உயிர்மெய் எழுத்துக்களைக் குறித்துவருதல் உரையுள் பிற விடத்துக் காணப்படும்.) (சந்திப். 7)