வரிஞ்சையூர்

வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர்’ (52-1) என. பெரிய புராணம் சுட்டும் ஊர்ப்பெயர் இது. சத்தி நாயனார் வரலாறுச் சொல்லப் புகும்போது அவர் பிறந்த ஊராக இதனைக் காட்டுகின்றார். இது நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள ஊர் என்ற எண்ணத்தைச் சேக்கிழார் அடிச்சுவட்டில் ஆசிரியர் தருகின்றார் (பக்-399). வரிஞ்சை என்ற பெயரையே நம்பியாண்டார் நம்பியும் சுட்டும் தன்மையைக் காண, இது மரூஉப் பெயரா என்ற கேள்வி எழுகிறது.