வயலூர்

விளைநிலங்களையொட்டி யெழுந்த ஊர்கள்‌ அப்பெயர்‌ களையே ஊர்ப்பெயர்களாகக்‌ கொண்டு விளங்கியிருக்கின்றன. விளைநிலத்தைக்‌ குறிக்கும்‌ வயல்‌ என்ற செரல்‌ ஊர்‌ என்ற பின்‌ ஒட்டுடன்‌ வயலூர்‌ என வழங்கியிருக்கிறது. வாயில்‌ என்ற சொல்லடியாகத்‌ தோன்றிய வாயிலார்‌ என்ற ஊர்ப்பெயரே நாளடைவில்‌ குறுகச்‌ சிதைந்து வயலூரர்‌ எனவும்‌ வழங்கி இருக்க வேண்டும்‌ என்றும்‌ கருதுகின்றனர்‌. செங்கற்‌பட்டைக்‌ சேர்ந்த திருவள்ளூர்‌ வட்டத்தில்‌ அவ்வூர்‌ உள்ளது. சிலப்பதிகாரத்தில்‌ குறிக்கப்‌ பெற்ற வயலூர்‌ பாண்டி நாட்டுள்ள தோரூர்‌ என்றும்‌, வார்த்திகனுக்கு ஒரு பாண்டியனார்‌ பிரமதாயமாகக்‌ கொடுக்கப்‌ பெற்றது என்றும்‌ தெரிகிறது. திருச்சி மாவட்டத்திலும்‌ ஒரு வயலூர்‌ உள்ளது. மடங்கா விளையுள்‌ ஒரு வயலூர்‌ நல்‌இ (சிலப்‌. 23:119.)