வன்தொடர்க்குற்றியலுகரம் அல்வழிக்கண் வல்லெழுத்து வரு மொழி முதலில்வருமாயின், அவ்வந்த வல்லெழுத்தே மிகும்.எ-டு : கொக்குக் கடிது, தச்சுக் கடிது, பொற்புப் பெரிதுவேற்றுமைப்புணர்ச்சிக்கண்ணும் கொக்குக்கால், கொக்குச் சிறகு -என்றாற் போல வல்லொற்று மிகும். (தொ. எ. 414, 426 நச்.)சிறுபான்மை அம்முச்சாரியை பெற்று, வட்டு + அம் + போர் = வட்டம்போர், புற்று + அம் + பழஞ்சோறு = புற்றம்பழஞ் சோறு – என்றாற் போலவரும். (தொ. எ. 417)‘வன்தொடர்மொழிக் குற்றியலுகரஈற்று வினையெச்சம், செத்துக் கிடந்தான்- செற்றுச் செய்தான் – நட்டுப் போனான் – என்றாற் போல மிக்கே முடியும்.(தொ. எ. 427)எட்டு என்ற எண்ணுப்பெயர் அன்சாரியை பெற்று எட்டன் காயம் – என்றாற்போலப் புணரும். (தொ. எ. 149)இரண்டு சாரியை தொடர்ந்து பார்ப்பு+அன்+அக்கு+குழவி =பார்ப்பனக்குழவி என முடிதலுமுண்டு. (தொ. எ. 418)