வண் வண்டூர்

வல்லவாழின் அருகேயுள்ள மலை நாட்டுத் தலம் இது. இது திருவமுண்டூர்’ என்ற வழக்கால் அழைக்கப்படுகிறது. நம்மாழ்வார்,
வைகல் பூங்கழி வாய் வந்து மேயும் குருகினங்காள்
செய்கொள் செந்நெலுயர் திருவண் வண்டூர் உறையும்
கைகொள் சக்கரத் தென் கனிவாய்ப் பெருமானைக் கண்டு (நாலா -2634)
போன்று பல பாடல்களிலும் இறைவனைப் புகழும் நிலையில், இவ்விடத்தின் நீர் வளத்தையும் சிறப்பிக்கின்றார். இவற்றை நோக்க, வண்டு நிறைந்த இடம் காரணமாக இப்பெயர் அமைந்து திருவண், அடையாக இணைந்து இருக்கலாமோ எனத் தோன்றுகிறது.