வண்பரிசாரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர் கோயில் அருகேயுள்ள ஊர் இது. திருமால் கோயில் உள்ள ஊர். நம்மாழ்வாரின் தாயார் பிறந்த ஊர் இது. இன்று திருப்பதிசாரம் என்று வழங்கப்படுகிறது.
வருவார் செல்வார் வண்பரி சாரத் திருந்த என்
திருவாழ் மார்வற்கென் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங் கும்மொடு
ஒருபாடுழல் வானோரடியானு முளனென்றே
என்று நம்மாழ்வார் இங்குள்ள திருமாலைப் பரவுகின்றார்.