வண்ணத்தியல்பு

சென்ற நுற்றாண்டினராம் தண்டபாணி சுவாமிகளால் இயற்றப்பட்டசந்தங்களைப் பற்றிய இலக்கணநூல். இதன்கண் 100 நூற்பாக்கள் உள.பொதுப்பாயிரம், நூல் மாட்சி, நூல் பிறப்பிடம், காலம் முதலியன என இவைபற்றிப் பத்துப் பாக்கள் உள (100 நீங்கலாக). தொகையிலக்கணம் வகையிலக்கணம் என 7 நூற்பாக்கள் அமைந்துள. தத்தச் சந்தம் முதலாகத் தய்யாச்சந்தம் ஈறாகச் சந்தங்கள் 72 நூற் பாக்களில் சொல்லப்படுவன.பிறழச்சியியல்பு, மெலித்தல் இயல்பு, தொடர்ச்சியியல்பு, மதிப்பியல்பு,புணர்ச்சியியல்பு, சிறப்பியல்பு, தழூஉம் இயல்பு, புலமையியல்பு என்பனபற்றி எஞ்சிய 21 நூற்பாக்கள் விளக்குகின்றன. இயம்பாதன பிறவும் மேலோர்நூல் நெறியாற் கொள்க என இறுதி வெண்பாப் புறனடையொன்று அமைக்கிறது.