வண்ணத்தின் சிறப்பியல்பு

சந்தக்குழிப்பில் மோனை அமைந்திருத்தல் வேண்டும். இருகலைகள்சேர்ந்து ஒரு நீண்ட அடியாகும். அவை ஒரே மோனை உடைய வாதல் வேண்டும்.எதுகை நான்காகும். வண்ணப்பா இரண்டாகப் பகுக்கப்படும். வண்ணப்பாவின்நான்கடிகளும் இரு பகுப்பாக வரு மெனவே, முதலிரண்டடி ஒரு பகுப்பு.அவ்விரண்டடிகளுக்கு நான்கு கலைகள். அவற்றுள் மூன்று கலையால் தலைவன்புகழ் கூறி, அடுத்த கலையால் அவன் மலை நாடு இவற்றின் அழகைக் கூறி,மூன்று நான்காம் அடிகளாகிய நான்கு கலைகளால் கவிதான் சொல்லக் கருதும்அகப்பொருள் புறப்பொருள் துறைச் செய்திகளைக் குறிப்பிடுவதுவண்ணப்பாவின் வழக்காகும்.தொங்கலும் தாழிசையும் எண்வகைத் துள்ளலும் கவி கூறும் அகப்பொருள்புறப்பொருள் துறைகளுக்கு உபகாரமாக வாராவிடினும், தமிழ்ப்புலவர் அவற்றைநீக்காது கொள்வர். தம்முடைய வேட்கையையும் தன்மையையும் தாம் விரும்பும்தெய்வத்தின் சிறப்பையும் செந்தமிழ்க்கு அழகு தரும் வண்ணப்பாவினால்குறிப்பிடுவது நன்மக்கள் மரபே.எல்லாப் பாக்களையும் பாவினங்களையும் வண்ணத்தொடு கூடிய துறைச்செய்திகள் உடையனவாக அமைப்பதும் சான்றோர் வழக்கே. (வண்ணத். 89 -94)