வண்டு பெண்டு – என்ற குற்றியலுகர ஈற்றுப் பெயர்கள் உருபுபுணர்ச்சிக்கண்ணும் பொருட் புணர்ச்சிக்கண்ணும் இன் சாரியை பெறும்.இரண்டன் தொகைக்கண் சாரியையின்றி இயல்பாகப் புணரும்; அல்வழிப்புணர்ச்சியிலும் இயல்பாகப் புணரும்.எ-டு : வண்டினை, வண்டின் கால்; பெண்டினை, பெண்டின் கால்; வண்டுகொணர்ந்தான், பெண்டு கொணர்ந்தான்; வண்டு கடித்தது,பெண்டுசிறந்தாள்.பெண்டு என்பது வேற்றுமையுருபு புணர்ச்சிக்கண் அன்சாரி யையும்பெறும்.எ-டு : பெண்டனை, பெண்டன்கால் (தொ. எ. 420,421)