இன்று ஆண்டார் கோயில் எனச் சுட்டப்படும் ஊர். தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. சம்பந்தர் பாடல் அமை யினும் இவ்வூர்ப் பெயர்க் காரணம் புரிந்து கொள்ள இயலாத தாக அமைகிறது.
சுடுகூர் எரிமாலை யணிவர் சுடர்வேலர்
கொடுகூர் மழுவாளொன்றுடையார் விடையூரவர்
கடுகூர் பசிகாமம் கவலை பிணியில்லார்
வடுகூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே
எனப்பாடும் சம்பந்தர் பாடலில் வடுகூர் புனல் என்பது என்ன என்பது புரியவில்லை ; எனினும் தமிழ் லெக்ஸிகனைக் காணும் போது மாம்பிஞ்சு அல்லது கருமணல் என்ற இரண்டும் பொருத்த முறுகிறது. இப்பொருளில் இப்பெயர் அமைந்திருக்கலாம். இல்லா விட்டால், வடுகர் வாழ்ந்த பகுதி என்ற நிலையிலும் பெயர்பெற் றிருக்கலாம். எனினும் வடுகர் வாழ்ந்த குறிப்பு எதுவும் தெரிய வில்லை. இதன் இயற்கைச் செழிப்பை,
பாலும் நறுநெய்யும் தயிரும் பயின்றாடி
ஏலும் சுடு நீறு மென்பு மொளிமல்கக்
கோலம் பொழிற் சோலைக் கூடி மடவன்னம்
ஆலும் வடுகூரிலாடும் மடிகளே என்கின்றார் சம்பந்தர் (87-2).