வடநூலுள் ஓரெழுத்துப் பதினெட்டாதல்

அ என்பதனை ஒரு மாத்திரை அளவிற்றாக ஒலிக்குங்கால் அது குற்றெழுத்து;இரு மாத்திரை அளவிற்றாக ஒலிக்குங்கால் அது நெட்டெழுத்து; மூன்றுமாத்திரை அளவிற்றாக ஒலிக் குங்கால் அஃது அளபெடை எழுத்து. அம்மூன்றும்எடுத்தல் – படுத்தல் – நலிதல் – என்ற ஓசைவேறுபாட்டால் ஒன்று மூன் றாய்ஒன்பது வகைப்படும். அவ்வொன்பது வகையும் மூக்கின் வளியொடு சார்த்தியும்சார்த்தாதும் ஒலிக்குமாற்றால் ஒவ் வொன்றும் இவ்விருவகைத்தாய்ப்பதினெட்டாம்; அவ்வாறு வேறுபடினும் உயிரெழுத்தாம் தன்மையில்திரியாவாய்ப் பதினெட்டும் ஓரினமாம். (சூ.வி.பக். 24)