வடநடைப் பகுபதம்

பகுதியாக நிற்கும் பகாப்பத முதற்கண் உயிராயினும் உயிர்மெய்யாயினும் வரின், நிலைமொழி முதற்கண் நிற்கும் இ ஈ – இரண்டும் ஐஎனத் திரிந்து பகுபதங்களாம். ஏகாரம் ஐயாகத் திரியும்; ஊவும் ஓவும்ஒளவாகத் திரியும்.எ-டு: இ ந்திரன் இருக்கும் திசை ஐ ந்திரி. கி ரியில் உள்ளன கை ரிகம். சி லையால் ஆகிய மலை சை லம். மி திலை யுள் பிறந்தாள் மை திலி. நி யாயநூல் உணர்ந்தோன் நை யாயிகன். வி யாகரணம் உணர்ந்தோன் வையா கரணன்.இவையெல்லாம் இகரம் ஐயாகத் திரிந்தன.கி ரியில் பிறந்தாள் கௌ ரி என ஒரோவிடத்து இகரம் ஒளகாரமாகத் திரிந்தது. வே தவழி நின்று ஒழுகுவார் வை திகர். ஏ காரம் ஐயாகத் திரிந்தது.சூ ரன் என்னும் சூரியன் மகனாம் சனி சௌ ரி – ஊ காரம் ஒள வாகத் திரிந்தது.சோ மன்மகனாம் புதன் சௌ மன் – ஓ காரம் ஒள வாகத் திரிந்தது. (தொ.வி. 86 உரை)