வஞ்சைக்களம்

சங்க இலக்கியத்தில் இவ்வூர்ப் பெயர் இல்லை. மலை நாட்டில் உள்ள தலங்களுள் திருமுறைப் பாடல் பெற்ற ஊராகிய இது, திருச்சூருக்கு 32 கி.மீ. தொலைவில் உள்ள தலம். இத்தலம் பரசு பாயர் தாயைக் கொன்ற பாவம் நீங்கும் பொருட்டு வழிபட்ட தலம் எனப்படுகிறது. அணியார் பொழில் சூழ்ந்த அஞ்சைக் களத்தப்பனைச் சுந்தரர், திருநாவுக்கரசர் பாடல்கள் சிறப்பிக்கின்றன. இன்று திருவஞ்சைக் களம் என்றே சுட்டப்படும் இவ்வூர் தாவரப் பெயரால் அமைந்தது எனச் சுட்டுவதற்கு வாய்ப்பு உளது. வஞ்சிக் கொடியால் பெயர் பெற்ற ஊர் குறித்து தமிழ் லெக்ஸிகன் சுட்டுகிறது. இவை அனைத்தும் மலை நாட்டுப்பகுதி யாக இருத்தல் இவண் சுட்டத்தக்கது. மேலும் இவண் வஞ்ஞைக் களத்திற்குக் கருவூர் கொடுங்கோளூர் இரண்டையும் சுட்டுகின்ற நிலை அமைகிறது. வஞ்சிக் களமும் காணப்படுகிறது. வஞ்சைக்களம் என்ற பெயர் பண்டு தொட்டே அமையா விடினும் வஞ்சி என்ற பெயரைச் சங்க இலக்கியத்திலேயே காண இயலுகிறது. சேரமன்னன் தலைநகராகயிருந்த இவ்வூர் வாடாவஞ்சி என புறநானூற்றில் சுட்டப்படுகிறது. வஞ்சி நாடு’ என்ற பெயர் சேர நாட்டையே குறிக்கப் பயன்படுமாற்றை மனோன் மணீயம் சுட்டுகிறது (2.3,75). எனவே வஞ்சிக் கொடி கள் நிறைந்த நாடாகிய வஞ்சி நாட்டில் வஞ்சிக்கொடியால் பெயர் பெற்ற பல் ஊர்களுள் ஒன்றாக, சிவன் கோயில் சிறப்புடன் திகழ்ந்த ஊராக இதனைக் கொள்ளலாம். மேலும் கடற்கரை சார்ந்த தலமாக இது இருந்திருக்குமோ என்ற எண்ணம், சுந்தரர் பாடல்கள் வழி எழும் ஒன்றாக அமைகிறது.
அலைக்கும் கடலங்கரை மேன் மகோதை
யணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனே
என்றாற் போன்று (சுந்த – 4-1) அடித்தார் கடல், அழைக்கும் கடல், ஆடும் கடல், அரவக்கடல், ஆர்க்கும் கடல் எனப் பல அடைகள் அமைகின்றன. மேலும் மகோதை என்ற பெயர் அடையும் இவண் எல்லாப் பாடல்களிலும் அமையுமாற்றைக் காணலாம்.
அரவக் கடல் அங்கரை மேன் மகோதை
யணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே (சுந்-4-6)
என்ற மகோதை என்பதற்குத் தமிழ் லெக்ஸிகன், கொடுங்கோளூர் எனப்பொருள் தருகிறது (vol v pa 1-2997). மகோதை என்பது கடல் பொருள் உடையதது. எனவே கடற் கரையைச் சார்ந்த ஊராகிய மகோதையாகிய கொடுங்கோளூரில் அமைந்த சிவத்தலமாகிய வஞ்சிக் கொடிகள் நிறைந்த இடம் என்பது பின்னர், அத்தலப் பெயராக வஞ்சைக் களம் என்றாகியதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இடம் என் என்று மேலும் இப்பெயராய்வு பற்றிய தமது எண்ணத்தில், மலை யாளத்தில் மிகப் பெரும்பான்மை வழக்காகப் படகையே வஞ்சி என்கின் றனர். வஞ்சிக் குளம் அல்லது வஞ்சிக்களம் என்பது வஞ்சிகள் அதாவது படகுகள் ஒன்று கூடும் இன்றும் கொள்ளப்படுகின்றது. படகு எனும் பொருளில் வழங்கும் வஞ்சிக்குளம் என்ற மிகச் சிறு கிராமத்தையே இக்காலத்தில் இங்குக் காணமுடிகிறது என்கின்றார் அறிஞர் ஒருவர். எனினும் இன்றைய பொருளை வைத்துச் கொண்டு, அன்று தமிழகத்தின் ஒரு பகுதியென இருந்த நிலப் பகுதியில் உள்ள வழக்கை ஆய்வது பொருத்தமான தா என்பது மேலும் சிந்திக்கத்தக்கது. மேலும் அஞ்சை (பார்வதி) நாட்டிய மாடிய அரங்கு – களம். அதனால் திருவஞ்சைக்களம் ஆகியது. அதன் திரிபுதான் திருவஞ்சிக்குளம் என்ற கருத்துமுண்டு. எனவே இவற்றை நோக்க, ஒரே பெயர் பல இடங்களுக்குச் சூட்டப்படு வதும் ஒரே மரம் பல இடங்களில் இருப்பதும் உண்மை என்ற நிலை யில் கருவூர் என்ற பெயரையுடையது வஞ்சி’ என்பது போன்று இப்பகுதியும் வஞ்சிக் களம் என்று தாவரப் பெயர் அடிப்படையில் தோற்றம் பெற்று வஞ்சைக் களமெனத் திருந்திருக்கலாம் என் பது பொருத்தமுறுகிறது.