வஞ்சி

வஞ்சி என்ற ஊர்ப்பெயர்‌ தரவரத்தால்‌ பெற்ற பெயர்‌. வஞ்ச மாநகர்‌ சேர நாட்டிலுள்ள திருவஞ்சைக்களமே வஞ்சி மாநகர்‌ எனப்படும்‌. திருச்சிராப்‌பள்ளி மரவட்டத்திலுள்ளதும்‌ கொங்கு நாட்டதுமான கரூரே வஞ்சிமாநகர்‌ என்பாரும்‌, மலை நாட்டு மேற்குத்‌ தொடர்ச்‌சி மலை அடிவாரத்தில்‌ பேரியாற்றங்‌ கரையிலுள்ள திருக்கரூரே வஞ்சி மாநகர்‌ என்பாரும்‌ எனப் பல வகை ஆராய்ச்சியாளருளர்‌. சேரன்‌ வஞ்சி என்னும்‌ நூல்‌ திரு வஞ்சைக்களத்தை வஞ்சி என்றும்‌, சேரன்‌ செங்குட்டுவன்‌, வஞ்சி மாநகர்‌ என்னும்‌ நூல்கள்‌ கரூரை வஞ்சி என்றும்‌ கூறியுள்ளன. வீரப்பத்தினி கண்ணகிக்குக்‌ கோயில்‌ அமைத்து வழிபட்ட சிறப்பினையுடையது சேரர் வஞ்சி. சேரரது குட புலத்துள்‌ கொங்கு மண்டலம்‌ ஒரு பிரிவு, என்பதும்‌, அம்மண்டலத்துக்‌ கரூவூர்‌ வஞ்சியே சேரரது ஆதித்‌ தலைநகர்‌ என்பதும்‌, பாண்டிய சோழர்களின்‌ ஆதிக்கம்‌ பெருகிய பிறகே ஒரு மரபினராயிருந்த பண்டைச்‌ சேரரின்‌ ஒரு கிளையினர்‌ தம்‌ கடற்கரைப்‌ பட்டினமான முசிறியைத்‌ தலைநகராகக்‌ கொண்டு குடமலை நாட்டை ஆண்டு வந்தனர்‌ என்பதும்‌, மற்றொரு கிளையினர்‌ கொங்கு நாட்டிலிருந்தே ஆட்சி புரியலாயினர்‌ என்பதும்‌ பிறவும்‌ சாஸன வழியால்‌ மலையிலக்காதலும்‌, கொடுங்கோளூராகிய முசிறியைக்‌ கரூவூர்‌ வஞ்சி என்ற பெயர்‌களால்‌ குறிப்பிட்டுள்ள சாஸனம்‌ ஒன்றுமே யாண்டுங்‌ காணக்‌ கிடையார்மையாலும்‌ தெளிய அறியலாம்‌ என்பர்‌. பெருமை வாய்ந்த வஞ்சி எது என்று அறிய முடியாமல்‌ இருப்பது ஒரு குறையே.
“வடபுல இமயத்து, வாங்குவிற்‌ பொறித்த
எழுவுறழ்‌, இணிதோள்‌, இயல்‌ தேர்க்குட்டுவன்‌
வருபுனல்‌ வாயில்‌ வஞ்சியும்‌ வறிதே“ (பத்துப்‌. சிறுபாண்‌ 48 50)
“வைத்த வஞ்சினம்‌ வாய்ப்பவென்று
வஞ்சி மூதூர்த்தந்து பிறர்க்கு உதவி (பதிற்‌. பதிகம்‌ 9,8 9)
“பூவினுள்‌ பிறந்தோன்‌ நாவினுள்‌ பிறந்த
நான்மறைக்‌ கேள்வி நவில்குரல்‌ எடுப்ப
ஏம இன்துயில்‌ எழுதல்‌ அல்லதை
வாழிய வஞ்சியும்‌ கோழியும்‌ போல
கோழியில்‌ எழாது, எம்பேர்‌ ஊர்துயிலே” (பரி. திரட்டு, 8;2 11)
“தொன்று முதிர்வடவரை வணங்கு வில்பொறித்து
வெஞ்சின வேந்தரைப்‌ பிணித்தோன்‌
வஞ்சி அன்ன, என்நலம்‌ தந்து சென்மே” (அகம்‌… 396;17 19)
“தண்பொரு நைப்புனல்‌ பாயும்‌
விண்பொருபுகழ்‌ விறல்‌ வஞ்சி
பாடல்‌ சான்ற விறல்‌ வேந்தனும்‌” (புறம்‌ 11;5 7