வச்சிரகாடு

சே௱ணைக்‌ கரையிலுள்ள ஒரு நாடு. (சிலப்‌.5;99 உரை) பாண்டி மண்டபத்திலுள்ள ஒரு கடற்கரை நாடு என்று களவியற்‌ காரிகை (47) கூறும்‌. வச்சிரம்‌ என்பது சதுரக்கள்ளி என்ற ஒருவகைத்‌ தாவரத்தை குறிப்பதால்‌ தாவரத்தால்‌ வச்சிர நாடு எனப்‌ பெயர்‌ பெற்றதோ என எண்ணவும்‌ இடம்‌ அளிக்கிறது. அல்லது ஒருவகை இரத்தினம்‌ என்றும்‌ பொருள்‌ உள்ளதால்‌ அவ்வகை இரத்தினம்‌ கிடைத்த பகுதி வச்சிர நாடு எனப்‌ பெயர்‌ பெற்றதோ எனவும்‌ எண்ண இடமளிக்கிறது.
“மாநீர்‌ வேலி வச்சிர நன்னாட்டுக்‌
கோனிறை கொடுத்த கொற்றப்‌ பந்தரும்‌ (சிலப்‌. 5;199 100)
“வச்சிரம்‌ அவந்தி மகதமொடு குழீஇய
சித்திர மண்டபத்திருக்க”…….. (௸. 28;86 89)