மகரம் குறுகுதற்குக் காரணம் தோன்ற வேண்டுமாயின் ‘இயையின்’ என்றபாடம் கொள்ளற்பாலது. பிறரெல்லாம் ‘வகாரமிசையும்’ என்றே பாடம் ஓதினர்.அவ்வாறு ஓதின், அது மகரக்குறுக்கம் வருமிடம் கூறியதாகவே முடியும்.இடம் கூறுதலே ஆசிரியர் கருத்தாயின், இச்சூத்திரம் மொழிமரபில் இடம் பெறவேண்டும். புணர்ச்சி வகையான் எய்தும் மகரத்தி னது திரிபு கூறுதலேஆசிரியர் கருத்தாதலின் ‘இயையின்’ என்றலே பாடமாதல் ஏற்கும். (தொ. எ.330 ச. பால.)