வகரம் என்ற மெய்யை ஈற்றெழுத்தாக வுடைய சொற்கள் அவ் இவ் உவ் என்றமூன்று பலவின்பால் சுட்டுப்பெயர்களும், தெவ் என்ற உரிச்சொல்லும்ஆகும். தெவ் என்ற உரிச்சொல் படுத்த லோசையான் பெயராகி உருபேற்றும்பயனிலை கொண்டும் வரும். எனவே, வகரமெய் நான்கு பெயர்களுக்கே ஈற்றெழுத்தாய் வரும் என்பது. (தொ. எ. 81. நச்.)