வகரஈறு அல்வழிக்கண் வன்கணம் வரின் வகரம் கெட ஆய்தம் வர, அவ் +கடிய, சிறிய, தீய, பெரிய = அ ஃ கடிய, அ ஃ சிறிய, அ ஃ தீய, அ ஃ பெரிய – என்றாற் போலப் புணரும்; மென்கணம் வரின், அவ் + ஞாண் =அ ஞ் ஞாண் – என்றாற் போல வந்த மெல்லெழுத்தாகும்; இடைக்கணம் வரின்அவ்யாழ் – என இயல்பாயும், உயிர்க்கணம் வரின் அவ்வாடை அவ்வில் – எனஒற்றிரட்டியும் புணரும்.வேற்றுமைக்கண் அவ் இவ் உவ் – என்பன உருபு புணருமிடத் தும் பொருட்புணர்ச்சிக்கண்ணும் வற்றுச்சாரியையும் அதனோடு இன்னும் பெற்றுமுடியும்.வருமாறு : அவற்றை, அவற்றால்; அவற்றுக்கோடு, அவற்றுத் தோல் -‘வற்று’ப் பெற்றது. அவற்றினை; அவற்றின் கோடு – வற்றும் இன்னும்பெற்றது.தெவ் என்பது தொழிற்பெயர் போல, வன்கணம் வரின் உகரமும்வல்லெழுத்தும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரமும், யகரம்வரின் இயல்பும், உயிர்வரின் இரட்டுதலும் பெற்றுப் புணரும்; மகரம்வரின் வகரம் மகரமாதலுமுண்டு.எ-டு : தெவ்வுக் கடிது; தெவ்வு ஞான்றது, தெவ்வு மாண்டது, தெவ்வுவலிது.தெவ் யாது, தெவ் வரிது; தெம் மாண்டது – என முறையே காண்க. (தொ.எ. 378- 382 நச்.)வகரஈற்றுச் சொற்கள் அவ், இவ், உவ், தெவ் – என்பன நான்கே. முதலனமூன்றும் அஃறிணைப்பன்மைச் சுட்டுப்பெயர். அவற்று ஈற்று வகரம்அல்வழிக்கண் வன்கணம் வருமிடத்தே ஆய்தமாகவும், மென்கணம் வருமிடத்தேவந்த மெல்லெழுத் தாகவும், இடைக்கணம் வருமிடத்தே இயல்பாகவும் புணரும்.தெவ் என்பது தொழிற்பெயர் போல இருவழியும் உகரச் சாரியை பெற்று வன்கணம்வரின் அவ் வல்லொற்று மிக்கும், ஏனைக் கணம் வரின் இயல்பாகவும் புணரும்.வருமொழி முதற்கண் மகரம் வரின் இருவழியும் வகரம் உகரச்சாரியை பெறாதுமகரமாகத் திரிதலுமுண்டு.எ-டு : அவ் + கடிய = அஃகடிய; அவ் + ஞான்றன = அஞ் ஞான்றன; அவ் +யாவை = அவ் யாவைஏனைய இரண்டற்கும் இவ்வாறே வருமொழிபுணர்த்து முடிக்க. (நன்.235)தெவ் + கடிது, நன்று, வலிது = தெவ்வுக் கடிது, தெவ்வு நன்று,தெவ்வு வலிது – அல்வழி; தெவ் + கடுமை, நன்மை வன்மை = தெவ்வுக்கடுமை,தெவ்வுநன்மை, தெவ்வுவன்மை – வேற்றுமை; தெவ் + மாண்டது = தெவ்வுமாண்டது, தெம் மாண்டது – அல்வழி; தெவ்+ மாட்சி = தெவ்வுமாட்சி, தெம்மாட்சி – வேற்றுமை; தெவ் + மன்னர் = தெம்மன்னர் – அல் வழி; தெவ் +முனை = தெம்முனை – வேற்றுமை . (நன். 236)