செய்யுளில் ழகரஉகர ஈற்றுச் சொல்லின் உகரம் ஊகாரமாக நீண்டு மேலும்அளபெடை பெறுவதுண்டு.எ-டு : எழு – எழூஉ., குழு- குழூஉ, தழு- தழூஉஎனவே, குறில் நின்றவிடத்தும் அதனை நெடிலாக்கி அள பெடுத்து மேலும்நீட்டலுமுண்டு என்பது பெறப்படுகிறது. இதனை இலக்கணக்கொத்துக்குற்றெழுத்தளபெடை என்னும்.எழு, தழு – முதலிய சொற்கள் உகர ஈறு ஊகார ஈறாகியவழி, ஊகாரஈறுஇயல்பானதன்று, அஃது உகர ஈறு என்று தெரி விக்கவே உகரம் அறிகுறியாகஎழுதப்பட, எழூஉ- தழூஉ- முதலிய சொற்கள் உண்டாயின. (எ. ஆ. பக். 144)ழகரஉகரமே யன்றி, ஏனைய உகரமும் நீளும் என்பதனைத் தொல். உடம்பொடுபுணர்த்துக் கூறியுள்ளார்.வருமாறு : ‘அஆ வ என வரூஉம் இறுதி’ -(தொ.சொ. 9 நச்.)‘தம்மொற்று மிகூஉம்’ – (தொ.எ.260 நச்.)‘விண்ணென வரூஉம் காயப்பெயர்’- (தொ.எ.305) (தொ.எ.261 நச். உரை)