ழகரஈறு அல்வழிக்கண் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும். எ-டு :யாழ் குறிது, சிறிது, தீது, பெரிதுசிறுபான்மை வல்லெழுத்து மிக்கும் மிகாதும் புணரும்.இருபெயரொட்டுப் பண்புத்தொகை அக்குப் பெறுதலு முண்டு. எ-டு :தாழப்பாவைதொல்காப்பிய அக்கு நன்னூலில் அகரமாகும். (தொ. எ. 405 நச். உரை)வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின் மிக்குப்புணரும்.எ-டு : பூழ்க்கால், சிறை, தலை, புறம் (தொ. எ. 383)தாழைத் திறக்கும் கோலாகிய தாழக்கோல் என்பது தாழ் + அக்கு + கோல் -என அக்குச்சாரியையொடு புணர்ந்த முடிபு. (தொ. எ. 384)தமிழ் என்பதும் அக்குப் பெற்றுத் தமிழக்கூத்து, தமிழமன்னர்,தமிழவள்ளல், தமிழஅ(வ)ரையர்- என்றாற் போல நாற்கணத் தொடும் புணரும்.சிறுபான்மை தமிழ்க்கூத்து, தமிழ்நாடு – என அக்குப் பெறாமலும்முடியும். (தொ. எ. 385 உரை)குமிழ், மகிழ் – முதலிய மரப்பெயர்கள் மெல்லெழுத்து மிக்கோ,அம்முச்சாரியை பெற்றோ நாற்கணத்தொடும் புணரும்.எ-டு : குமிழ்ங்கோடு, குமிழங்கோடு; குமிழநார், குமிழ வளர்ச்சி,குமிழஇ (வி)லை); மகிழ்ங்கோடு, மகிழங் கோடு; மகிழநார், மகிழவளர்ச்சி,மகிழஇ (வி)லைபாழ் என்பது வன்கணம் வரின் வல்லெழுத்தும் மெல் லெழுத்தும்உறழும்.எ-டு : பாழ்க்கிணறு, பாழ்ங்கிணறு; இது பாழுட் கிணறு- எனவிரியும். (387)ஏழ் என்ற எண்ணுப்பெயர் உருபேற்குமிடத்தும் பொருட்புணர்ச்சிக்கண்ணும் அன்சாரியை பெற்றுப் புணரும். பொருட்புணர்ச்சிக்கண் எழு எனத் திரிந்தும் புணரும்.எ-டு : ஏழனை, ஏழனொடு; ஏழன்காயம் ஏழன்சுக்கு – 388; ஏழ் + கலம்,கழஞ்சு, கடல் = எழுகலம், கழஞ்சு, கடல் -389; ஏழ் + பத்து = எழுபஃது;ஏழ் + ஆயிரம் = எழாயிரம்; ஏழ் + நூறாயிரம் = ஏழ்நூறாயிரம்; ஏழ் +தாமரை = ஏழ் தாமரை; ஏழ்+வெள்ளம் = ஏழ் வெள்ளம்; ஏழ் + ஆம்பல் =ஏழாம்பல்; ஏழ் + அகல், உழக்கு = ஏழகல், ஏழுழக்கு (390 – 394); கீழ் +குளம்= கீழ்குளம், கீழ்க்குளம் – என்ற உறழ்ச்சி முடிவு. (395)