ழகரஈற்றுப் பெயர் உருபொடு புணர்தல்

ழகரஈற்றுப் பெயர்கள் உருபொடு புணரும்வழி அன்சாரியை யும்இன்சாரியையும் பெறும்.எ-டு : பூழ் + ஐ = பூழனை, பூழினை; யாழ் +ஐ = யாழனை, யாழினை; ஏழ்+ஐ = ஏழனை, ஏழினை. (தொ. எ. 194 நச். உரை)தாழ் + ஐ= தாழினை, தாழை – எனச் சிறுபான்மை இன் சாரியை பெற்றும்சாரியை எதுவும் பெறாதும் உருபு ஏற்பனவும் உள. (தொ. எ. 202 நச்.உரை)