ழகரஈற்றுப் புணர்ச்சி விதி

ழகரஈற்றுப் பெயர்முன் வருமொழி முதலில் க ச த ப – க் களாகிய வன்கணம்வரின், அல்வழிக்கண் இயல்பாதலும் மிகுதலும், வேற்றுமைக்கண் மிகுதலும்இனமெல்லெழுத் தோடு உறழ்தலும் பொதுவான விதியாம்.எ-டு : வீழ் கடிது – அல்வழிக்கண் எழுவாய்த் தொடர் இயல்பு;பூழ்ப் பறவை – அல்வழிக்கண் இருபெய ரொட்டுப் பண்புத்தொகை மிகுதல்;பூழ்ச்சிறை – வேற்றுமைக்கண் (ஆறன் தொகை) மிகுதல்: பாழ்க் கிணறு,பாழ்ங்கிணறு – வேற்றுமைக்கண் வல்லினம் மெல்லினம் உறழ்தல்; (பாழுட்கிணறு) – பாழாகிய கிணறு (பண்புத் தொகை) என அல்வழிக்கண்ணும்இவ்வுறழ்ச்சி முடிபே கொள்க. (நன். 224)தமிழ் என்ற சொல் வேற்றுமைப்புணர்ச்சிக்கண் நாற்கணமும் வருமிடத்து,அகரச்சாரியை பெறுதலுமுரித்து.எ-டு : தமிழ் + பிள்ளை, நாகன், வடுகன், அரசன் = தமிழப் பிள்ளை,தமிழநாகன், தமிழவடுகன், தமிழவரசன்; தமிழ் + சுவை = தமிழின் சுவை – எனஇன்சாரியைப் பேறும் கொள்க.தாழ் என்ற சொல் கோல் என்ற வருமொழியொடு புணரு மிடத்தும் அகரச்சாரியைபெறும். தொல்காப்பியத்து அத்து நன்னூலில் அகரமெனப்பட்டது.வருமாறு : தாழ் + கோல் = தாழக்கோல் – தாழைத் திறக்கும் கோல் -என வேற்றுமைப் புணர்ச்சி (நன். 225)கீழ் என்ற சொல்முன் வல்லின முதல் மொழி வருமிடத்துப் புணர்ச்சிக்கண்வல்லினம் மிகுதலும் மிகாமையும் ஆகிய இருநிலையு முண்டு.எ-டு : கீழ்குலம், கீழ்க்குலம்; கீழ்சாதி, கீழ்ச்சாதி‘கீழ்’ பண்பாகுபெயராய்க் கீழ்க்குலம் முதலியன இருபெய ரொட்டுப்பண்புத்தொகை ஆதலின், இஃது அல்வழிப் புணர்ச்சியாம். (நன். 226)