ளகாரஈறு, அல்வழிக்கண் வன்கணம் வந்துழி, முள்கடிது- முட்கடிது-என்றாற் போல உறழ்ந்து புணரும்; முள்குறுமை- முட்குறுமை, கோள்குறுமை,கோட்குறுமை, வாள்கடுமை- வாட்கடுமை எனக் குணவேற்றுமைக்கண்ணும் உறழ்ந்துபுணரும்.ஏழன் உருபின் பொருள்பட வரும் அதோள் இதோள் உதோள் எதோள் – என்பனஅதோட் கொண்டான், இதோட் கொண்டான், உதோட் கொண்டான், எதோட் கொண் டான். -என ளகரம் டகரமாகத் திரிந்து புணரும். (தொ. எ. 398 நச். உரை)வருமொழியில் தகரம் வரின் நிலைமொழியீற்று ளகரம் டகரமாகத்திரிதலேயன்றி ஆய்தமாகவும் திரியும்.எ-டு : முள் +தீது = முட்டீது, முஃடீது (399)நெடிலை அடுத்த ளகரஒற்று இயல்பாகவும், குறிலை அடுத்த ளகரஒற்றுடகரமாகத் திரிந்தும் புணரும்.எ-டு : கோள் + கடிது = கோள் கடிது; புள் + தேம்ப = பு ட் டேம்ப; கள் + கடிது = க ட் கடிது (400)உதள் கடிது – என இயல்பாயும், உதணன்று – என நகரம் வருமொழி முதலில்வருவழி நிலைமொழியீற்று ளகரம் கெட்டும், உதளங்காய் – என அம்முச்சாரியைபெற்றும் புணர்தலுண்டு. உதள் – ஆண்ஆடு, ஒரு மரம். (400 உரை)ளகரஈற்றுத் தொழிற்பெயர்கள் அல்வழியில் உகரம் பெற்றும், வன்கணம்வரின் வல்லெழுத்து மிக்கும், மென்கணம் வரின் உகரம் பெற்றும், யகரமும்உயிரும் வரின் முறையே இயல் பாகவும், தனிக்குறில் முன் ஒற்றுஇரட்டியும் புணரும்.எ-டு : துள்ளுக் கடிது; துள்ளு ஞான்றது; துள்யாது; துள்ளரிது.(401 உரை)மெலிவரின் இருவழியும் ணகரமாகும்.எ-டு : மு ண் ஞெரிந்தது; மு ண் ஞெரி, மு ண் மாட்சி (397)கோள் கடிது கோட் கடிது – எனத் தொழிற்பெயர்கள் உறழ்ந்துமுடிவனவுமுள. வாள் கடிது வாட் கடிது – என வருவனவும் கொள்க. (401உரை)புள், வள்- என்ற பெயர்களும் தொழிற் பெயர் போல அல் வழிக்கண் வன்கணம்வரின் உகரமும் வல்லெழுத்தும் பெற்றும், மென்கணம் வரின் உகரம்மாத்திரம் பெற்றும், யகரம் வரின் இயல்பும், உயிர் வரின் ளகரஒற்றுஇரட்டுதலும் பெற்றும் புணரும்.எ-டு : புள்ளுக்கடிது, வள்ளுக்கடிது; புள்ளு ஞான்றது, வள்ளுஞான்றது; புள்யாது; புள்ளினிது. (403)வேற்றுமைக்கண் ளகரம் டகரமாக, வன்கணம் வரின், முட் குறை- வாட்கடுமை- எனத் திரிந்து முடியும். (396)மென்கணம் வரின் ளகரம் ணகரமாதல் மேல் கூறப்பட்டது.தொழிற்பெயர் அல்வழிபோல வேற்றுமைக்கண்ணும், துள்ளுக்கடுமை,துள்ளுஞாற்சி, துள்ளுவலிமை, துள் யாது, துள்ளருமை – எனப் புணரும்.(இடைக்கணத்து வகரம் மென்கணம் போன்றது.)இருள் என்பது இருளத்துச் சென்றான் – இருளிற் சென்றான் – எனமுடியும். (402)புள், வள்- என்பன வேற்றுமைக்கண் புள்ளுக்கடுமை, புள்ளு ஞாற்சி,வலிமை; வள்ளுக்கடுமை; வள்ளுஞாற்சி, வலிமை என வரும். (403)