ளகரஈற்றுப் புணர்ச்சி

ளகரஈற்று வேற்றுமைப்புணர்ச்சியில் வருமொழி முதல் வன்கணம் வரின்ஈற்று ளகரம் டகரம் ஆகும்; அல்வழிப் புணர்ச்சியில், வன்கணம் வரின்ளகரம் டகரத்தோடு உறழும்; இருவழிக்கண்ணும் மென்கணம் வரின் ஈற்று ளகரம்ணகரமாகும்; இடைக்கணம் வரின் இயல்பாகப் புணரும்.எ-டு : முள் + குறை= முட்குறை – வேற்றுமை – திரிதல்; முள் +குறிது = முள் குறிது, முட் குறிது – அல்வழி – உறழ்ச்சி; முள் + ஞெரி= முண்ஞெரி – வேற்றுமை – திரிதல்; முள் + ஞெரிந்தது = முண் ஞெரிந்தது- அல்வழி – திரிதல்; முள் +யாப்பு=முள்யாப்பு – வேற்றுமை -இயல்பு;முள் + யாது = முள் யாது – அல்வழி – இயல்பு (நன். 227)தனிக்குறிலை அடுத்த ளகரஒற்று அல்வழிக்கண் தகரம் வருமொழி முதல்வருவழி டகரமாதலேயன்றி ஆய்தமாகவும் திரியும்எ-டு : முள் + தீது = முட்டீது, முஃடீது (நன். 228)தனிக்குறிலைச் சாராது தனிநெடிலையோ குறிலிணை முதலிய வற்றையோ சார்ந்தளகரஈறு, அல்வழிக்கண், வருமொழி முதல் தகரம் திரிந்தபின் தான் கெடும்;அல்வழி வேற்றுமை – என இருவழியும் வருமொழி முதல் நகரம் திரிந்தபின்தான் கெடும்; அல்வழிக்கண் தகரம்நீங்கலான ஏனைய வன்கணம் வரின் இயல்பும்திரிபும் பெறும்;வேற்றுமைக்கண் பெரும் பாலும் இயல்பாம்.எ-டு : வேள் +தீயன் =வேடீயன் – அல்வழி; வேள் +நல்லன் = வேணல்லன்- அல்வழி; வேள் + நன்மை = வேணன்மை – வேற்றுமை; மரங்கள் +கடிய= மரங்கள்கடிய – அல்வழி (எழுவாய்த் தொடர்); வாள் +படை = வாட்படை – அல்வழி (இருபெயரொட்டுப் பண்புத்தொகை); வாள் + போழ்ந்திட்ட = வாள் போழ்ந் திட்ட -இது வேற்றுமை; மூன்றன் தொகைஇனி,வேற்றுமைப் புணர்ச்சிக்கண்ணும், வருமொழித் தகரம்திரிந்தவிடத்து நிலைமொழியீற்று ளகரம் கெடுதலும், அல் வழிக்கண்நிலைமொழியீற்று ளகரம் டகரமாதலும், தனிக் குறிலை யடுத்த ஈற்று ளகரம்அல்வழியில் உறழாமல் இயல் பாதலும் கொள்ளப்படும்.எ-டு : வேள் +தீமை =வேடீமை; தாள் +துணை = தாட் டுணை; கொள்+பொருள் =கொள்பொருள் – என முறையே காண்க. (நன். 229)