ளகரஈற்றுத் தொழிற்பெயர்

ளகரஈற்றுத் தொழிற்பெயர் அல்வழி வேற்றுமை என ஈரிடத் தும் உகரம்பெறாது; நாற்கணமும் வருவழி முடியுமாறு:எ-டு : கோள் +கடிது = கோள் கடிது, கோட் கடிது – அல் வழி -உறழ்ச்சி; கோள் + கடுமை = கோட்கடுமை – வேற்றுமை – திரிபு; கோள் +நன்று = கோணன்று – அல்வழி – கெடுதல்; கோள் +நன்மை = கோணன்மை -வேற்றுமை கெடுதல்; கோள் + வலிது = கோள் வலிது – அல்வழி – இயல்பு; கோள்+ வலிமை = கோள் வலிமை – வேற்றுமை – இயல்பு; கோள்கடிது, சிறிது, தீது,பெரிது – அல்வழி – இயல்பு. (நன். 230)