ல, ள பிறப்பு

நா விளிம்பு தடித்து பல்லினது அணிய இடத்துப் பொருந்த அவ்விடத்துஅவ்வண்ணத்தை ஒற்ற லகாரமும், அதனைத் தடவ ளகாரமும் பிறக்கும் என்றார்இள. நா மேல்நோக்கிச் சென்று தன்விளிம்பு அண்பல் அடியிலே உறாநிற்க, அவ்விடத்து அவ்வண்ணத்தை நாத் தீண்ட லகாரமும், அவ் வண்ணத்தை நாத் தடவளகாரமும் பிறக்கும் என்றார் நச்.இவர்தம் உரைகளால், ல் ள் – என்பவற்றின் பிறப்பிடம் ஒன்றே, முயற்சிதீண்டுதலும் தடவுதலும் ஆகிய வேறுபாடுகள் என்பது பெறப்படும்.லகாரம் பல்லின் முதலில் பிறப்பது என்பதே தொல்காப் பியனார்,நன்னூலார், இலக்கணவிளக்க ஆசிரியர் முதலி யோர் கருத்து. வடமொழியிலும்லகாரத்தின் பிறப்பிடம் பல்லினடி என்பதே கூறப்படுகிறது.எனவே, லகரத்தின் பிறப்பிடம் அண்பல்அடி, முயற்சி ஒற்றுதல்;ளகரத்தின் பிறப்பிடம் அண்ணம், முயற்சி வருடுதல் – எனக் கொள்க.(எ.ஆ.பக். 82, 83)