லகார ஈற்றுப் புணர்ச்சி

லகாரஈறு அல்வழிக்கண் வன்கணம் வரின் றகரத்தோடு உறழும்.எ-டு : கல் குறிது, கற் குறிது, கல் சிறிது, கற் சிறிது.வினைச்சொல் ஈறு திரிந்து வந்தானாற் கொற்றன், பொருவா னாற் போகான் -என லகரம் றகரமாகத் திரியும். அத்தாற் கொண்டான், இத்தாற் கொண்டான்,உத்தாற் கொண்டான், எத்தாற் கொண்டான், அக்காற் கொண்டான் – என்று ஈறுதிரிவனவும் உள.வருமொழி முதலில் தகரம் வரின் நிலைமொழியீற்று லகரம் றகரமாகத்திரிதலே யன்றி ஆய்தமாகவும் திரியும்.எ-டு : கல் + தீது = கற்றீது, கஃறீது;நெடிலை அடுத்த லகரம், தகரம் வருமொழி முதற்கண் வரின் தான் கெட,வருமொழித் தகரம் றகரமாகத் திரியப் பெற்று முடியும்; அன்றித் தானும்றகரமாகத் திரியவும் பெறும்.எ-டு : வேல் + தீது = வேறீது, வேற்றீது – என இரு முடிபும்கொள்க.நெடிலை அடுத்த லகரம் வன்கணம் வருவழி இயல்பாதலும், றகரமாகத் திரிதலுமுண்டு.எ-டு : பால் + கடிது = பால் கடிது; வேல்+ கடிது = வேற்கடிதுநெல், செல், கொல், சொல் – என்பன வன்கணம் வருவழி, லகரம் றகரமாகத்திரிந்தே புணரும்.எ-டு : நெ ற் காய்த்தது, செ ற் கடிது, கொ ற் கடிது, சொ ற் கடிதுஇன்மையை உணர்த்தும் இல் – என்பது வன்கணத்தொடு புணருமிடத்து, ஐகாரச்சாரியை பெற்று வலிமிகுதலும் மிகாமையும், ஆகாரம் பெற்று வலிமிகுதலும் -என மூவகை யான் முடியும்.வருமாறு: இல்லைக் கொற்றன், இல்லை கொற்றன், இல்லாக் கொற்றன்.இல் என்பது இயல்புகணத்தோடு இல்லை ஞாண், இல்லை வானம், இல்லை அணி எனஐகரம் பெற்றுப் புணரும்.இல் என்பது எண்ணில் குணம், பொய்யில் ஞானம், மையில் வாண்முகம் – எனஇயல்பாகவும் புணரும்.தா +இல்+நீட்சி = தாவினீட்சி- என, லகரம் கெட வரு மொழி நகரம்னகரமாகத் திரிந்து புணர்தலுமுண்டு.வல் என்பது தொழிற்பெயர் போல இருவழியும் வன்கணம் வரின் உகரமும்வல்லெழுத்தும், மென்கணமும் இடைக் கணத்து வகரமும் வரின் உகரமும், யகரம்வரின் இயல்பும், உயிர்வரின் இரட்டுதலும் பெறும்.எ-டு : வல்லுக்கடிது; வல்லுஞான்றது, வல்லுவலிது; வல்யாது;வல்லரிது – அல்வழி. வல்லுக்கடுமை, வல்லுஞாற்சி, வல்லுவலிமை;வல்யாப்பு, வல்லருமை – வேற்றுமை. இவ்வாறு இருவகை முடிபும் பெறும். வல்+ நாய் = வல்ல நாய், வல்லு நாய்; வல் + பலகை =வல்லப் பலகை, வல்லுப்பலகை – இவற்றுள் அகரமும் உகரமும் சாரியை.பூல் வேல் ஆல் – என்பனஅம்முச்சாரியை இடையே பெற்று,பூலங்கோடு, வேலங்கோடு, ஆலங்கோடு; பூலஞெரி, வேல ஞெரி, ஆலநெரி;பூலவிறகு, வேலவிறகு, ஆலவிறகு; பூலஈ (வீ)ட்டம்- என்றாற் போல வரும்.பூல், பூலாங்கோடு பூலாங்கழி – என ஆம்சாரியை பெறுதலு முண்டு.லகார ஈற்றுத் தொழிற்பெயர்கள் இருவழியும் வன்கணம் வரின் உகரமும்வல்லெழுத்தும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரமும், யகரம்வரின் இயல்பும், உயிர் வரின் ஒற்று இரட்டுதலும் பெறும்.எ-டு : புல்லுக் கடிது; புல்லு ஞான்றது, புல்லு வலிது; புல்யாது; புல் லரிது – அல்வழி. புல்லுக்கடுமை; புல்லு ஞாற்சி,புல்லுவலிமை; புல்யாப்பு; புல்லருமை – வேற்றுமை.கன்னல் கடிது, பின்னல் கடிது – அல்வழிக்கண் இயல்பாக முடிந்தது.கன்ன ற் கடுமை, பின்ன ற் கடுமை – வேற்றுமைக்கண் லகரம் றகரமாகத் திரிந்தது. மென்கணம்வந்துழி, வேற் றுமைக்கண் கன்ன ன் ஞாற்சி, பின்ன ன் மாட்சி – என லகரம் னகரமாயிற்று, கன்ஞெரி கன்மாட்சி -போல.ஆடல் பாடல் கூடல் நீடல்- என்பன ஆடற்கடுமை பாடற் கடுமைகூடற்கடுமை நீடற்கடுமை – என வேற்றுமைக்கண் லகரம் றகரமாயின, க ற் குறை நெ ற் கதிர் – போல.வெயில் என்பது அத்தும் இன்னும் பெற்று, வெயிலத்துச் சென்றான் -வெயிலிற் போனான் – என வரும். வெயிலத்து ஞான்றான். வெயிலின் ஞான்றான்-என இயல்பு கணத்தும் கொள்க. (தொ. எ. 366-377 நச்.)லகரஈறு வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வருமொழி முதல் வன்கணம்வருமிடத்து றகரமாகத் திரியும்; அல்வழிக் கண்றகரத்தோடு உறழும். இனிஇருவழியும் மென்கணம் வருமிடத்தே நிலைமொழியீற்று லகரம் னகரமாகத்திரியும்; இடைக்கணம்வரின் இயல்பாகப் புணரும். தனிக் குற்றெ ழுத்தைஅடுத்து லகரஈறு வருமொழி முதல்உயிர்வரின் இரட்டும்.எ-டு : கல்+ குறை = கற்குறை – வேற்றுமை; கல் + குறிது= கல்குறிது, கற் குறிது – அல்வழி; கல் + ஞெரிந்தது= கன் ஞெரிந்தது -அல்வழி; கல் + ஞெரி = கன்ஞெரி – வேற்றுமை; கல்+ யாது= கல் யாது -அல்வழி; கல் + யானை = கல்யானை – வேற்றுமை;கல் + அழகிது = கல் லழகிது -அல்வழி; கல் + அழகு = கல்லழகு – வேற்றுமை. (நன். 227)தனிக்குறிலை அடுத்த லகரம் வருமொழி முதல் தகரம் வருவழி றகரமாதலேஅன்றி, ஆய்தமாகத் திரிதலும் அல் வழிப் புணர்ச்சிக்கண் நிகழும்.எ-டு : கல் + தீது = கற்றீது, கஃறீது (நன். 228)தனிக்குறிலைச் சாராது தனிநெடில் குறிலிணை முதலிய வற்றை அடுத்துமொழியீற்றில் நிற்கும் லகரம், அல்வழிப் புணர்ச்சியில் வருமொழி முதலில்வரும் தகரம் (றகரமாக) திரிந்தபின் தான் கெடும்;அல்வழி வேற்றுமை எனஈரிடத்தும் வருமொழி முதலில் நகரம் (னகரமாகத் ) திரிந்தபின் தான்கெடும். வன்கணம் வருமிடத்து நிலைமொழியீற்று லகரம் அல்வழிக்கண்(விகற்பமின்றி) இயல்பாதலும் திரிதலும் உரித்து; வேற்றுமைக்கண்(திரியாமல்) இயல்பாதலும் உரித்து.எ-டு : தோன்றல்+ தீயன் = தோன்றறீயன் – அல்வழியில் தகரம் திரிந்தபின் லகரம் கெட்டது.தோன்றல் + நல்லன் = தோன்றனல்லன், தோன்றல் + நன்மை = தோன்றனன்மை- இருவழியும் னகரம் திரிந்தபின் லகரம் கெட்டது.கால் +கடிது = கால்கடிது; வேல் + படை = வேற் படை -அல்வழியில்வலிவர, லகரம், இயல்பாதலும், திரிதலும் காண்க.கால் +குதித்து = கால் குதித்து – வேற்றுமையில் வலிவர, லகரம்இயல்பாயிற்று.வேற்றுமைப்புணர்ச்சிக்கண்ணும் தோன்றல் +தீமை = தோன்ற றீமை – என,வருமொழி முதல் தகரம் திரியுமிடத்து நிலைமொழி யீற்று லகரம் கெடுதலும்,கால் +துணை = காற்றுணை என, லகரம் கெடா(து நின்று றகரமாகத்திரிந்த)மையும், கொல் களிறு என, வினைத்தொகைக்கண் நிலைமொழியீற்று லகரம்இயல்பாதலும் பிறவும் உரையிற் கோடலாம். (நன். 229)லகரஈற்றுத் தொழிற்பெயர் அல்வழி வேற்றுமை என ஈரிடத்தும் உகரச்சாரியைபெறாது. வன்கணம் வருமொழி முதலில் வருமிடத்தே அல்வழிக்கண் உறழாமல்இயல்பாக முடியும் லகர ஈற்றுத் தொழிற்பெயர்கள் உள.எ-டு : ஆடல் சிறந்தது, ஆடனன்று, ஆடல் யாது, ஆட லழகிது; ஆடற்சிறப்பு, ஆடனன்மை, ஆடல்வனப்பு, ஆடலழகு; ஈரிடத்தும் உகரச்சாரியைபெறாமல் முடிந்தன.நடத்தல் கடிது – என அல்வழிக்கண் வலி வரின் உறழாமல் இயல்பாகமுடிந்தது. (பின்னல் கடிது பின்னற்கடிது, உன்னல் கடிது உன்னற்கடிது -என அல்வழியில் வன்கணம் வருவழி நிலைமொழியீற்று லகரம் றகரத்தோடுஉறழ்ந்து முடிதலே பெரும்பான்மை என்க.) (நன். 230)வல் என்ற லகரஈற்றுப்பெயர் தொழிற்பெயர்போல இருவழி யும் உகரம்பெற்றுப் புணரும்; பலகை, நாய் – என்ற சொற்கள் வருமொழியாக வரின்,வேற்றுமைப் புணர்ச்சியில் உகரமே யன்றி அகரச்சாரியையும் பெறும்.எ-டு : வல்லுக்கடிது, வல்லுக்கடுமை; வல்லுப்பலகை, வல்லப்பலகை;வல்லுநாய், வல்லநாய்(வல்லுப் பலகை – வல்லினது அறை வரைந்த பலகை;வல்லு நாய் – வல்லினுள்நாய்.)வல்லுப்புலி, வல்லப்புலி – எனப் பிற பெயர் வரினும் அகரப் பேறுகொள்க. வல்லாகிய நாய் – என இரு பெயரொட்டாய வழி, அகரச் சாரியை பெறாது,(நன். 231)நெல், செல், சொல், கொல் – என்பன அல்வழிப்புணர்ச்சிக் கண்வேற்றுமைப்புணர்ச்சியிற் போல லகரம் றகரமாகத் திரியும். (செல் – மேகம்;கொல் – கொல்லன், கொல்லன் தொழில்; சொல் – நெல்)எ-டு : நெற் கடிது, செற் சிறிது, கொற் றீது, சொற் பெரிது(நன். 232)இன்மைப் பண்பை உணர்த்தும் இல் என்னும் சொல் வரு மொழியொடுபுணரும்வழி இயல்பாக முடிதலும், ஐகாரச் சாரியை பெற்று வருமொழிமுதல்வல்லினம் மிக்கும் மிகாமலும் விகற்பமாதலும், ஆகாரச்சாரியை பெற்றுவருமொழி வல்லினம் மிகுதலும் பொருந்தும்.எ-டு : இல் + பொருள் = இல்பொருள், இல்லைப்பொருள், இல்லை பொருள்,இல்லாப் பொருள்வருமொழி நாற்கணமும் கொள்க. (சாரியைப் பேற்றுக்கும் பொருந்தும்)இல் + ஞானம், வன்மை, அணி = இல்லை ஞானம், இல்லை வன்மை, இல்லையணி; இல்லா ஞானம், இல்லா வன்மை, இல்லா வணி (யகரவகரங்கள் உடம்படுமெய்)ஐகாரமும் ஆகாரமும் சாரியை யாதலின், இப்புணர்மொழிகள் யாவும்பண்புத்தொகையே. (நன். 233)