ற, னபிறப்பு

நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து அண்ணத்தைத் தொட, டகரம் ஒலிக்கும்என்று பிராதிசாக்கியம் கூறுகிறது. தொல். அம்முயற்சியை ற் ன் – என்றமெய்களுக்குச் சொல்லியுள்ளார். இதனால் றகரம் வடமொழியில் டகரஒலியைஉடையது என்பது புலனாம்.இக்காலத்து றகரம், இரட்டித்து வருமிடங்களில் ஒருவாறாக வும்,னகரத்தொடு சேர்ந்து வருமிடங்களில் ஒருவாறாகவும், தனியேநிற்குமிடங்களில் ஒருவாறாகவும் ஒலிக்கிறது.றகரம், டகரம் பிறக்குமிடத்தை அடுத்துக் கீழில் பிறப்பது. றகரம்,தனியே வருமிடங்களில் வல்லொலியின்றி ஒலிப்ப தாயிற்று. இக்காலத்து ரகரறகர ஒலிவேறுபாடின்றி ஒலிக்கப் படுதலே பெரும்பான்மை.அணரி நுனிநா அண்ணம் ஒற்ற (- நன்கு தாக்க) றன – வும், அணரி நுனிநாஅண்ணம் வருட (பட்டும் படாமலும் வருமாறு தடவ) ர ழ – வும் பிறக்கும்.(எ.ஆ.பக். 80, 81)றகரத்தை ஒலிக்கும்போது போல, னகரத்தை ஒலிக்கும்போது, நாநுனிஅண்ணத்தொடு மெய்யுறுதலின்று; பரந்து நிற்றலும் இன்று. றகரம் பிறக்கும்இடம் அண்பல்முதல்; னகரம் பிறக்குமிடம் அதற்குப் பின்னுள்ள அண்ணம்.(எ.கு.)