ர, ழ, ற பிறப்பு

ர, ற – பிறப்பிடம் ஒன்றே. முயற்சியிலே வேறுபாடுள்ளது.“றகாரத்திற்கு நுனிநா அண்ணத்தை நன்கு தாக்கும். ரகாரத் திற்கு நுனிநாஅண்ணத்தைப் பட்டும் படாமலும் தடவும். ரகாரம் பிறக்குமிடத்தில் நன்குஒற்றின் றகாரம் பிறக்கும்” என்று கன்னடமொழியில் கூறப்பட்டுள்ளது.(எ.ஆ.பக். 82)ரகாரம் போன்றே ழகாரமும் நுனிநா மேல்நோக்கிச் சென்று மேல்வாயைப்பட்டும் படாமலும் தடவுதலால் பிறக்கும்.ற் ன், ர் ழ் – நான்கன் பிறப்பிடமும் ஒன்றாக இருப்பினும், ற் ன் -உண்டாகும்போது பட்டும் படாமலும் நாநுனி அண்ணத்தை ஒற்றுகிறது; ர் ழ் -உண்டாகும்போது அண்ணத்தைத் தடவுகிறது. ஆயின் ரகாரத்தை ஒலிக்கும் போதுகாற்றிற்கு வாயை விட்டு வெளியே செல்ல எவ்வளவு இடன் இருக்கிறதோ,அவ்வளவு இடன் ழகாரத்தை ஒலிக்கும் போது இல்லை. (எ.கு.பக். 99)