ரகாரஈறு வேற்றுமைக்கண் வல்லெழுத்து வரின் அவ்வல் லெழுத்து மிக்குமுடியும்.எ-டு : தேர்க்கால், தேர்ச்செலவுசிறுபான்மை வேர்ங்குறை, வேர்க்குறை – என்ற உறழ்ச்சி முடிவும்பெறும். (தொ. எ. 362 நச்.)ஆர், வெதிர், சார், பீர் – என்பன மெல்லெழுத்து மிக்கு,ஆர் ங் கோடு, வெதிர் ங் கோடு, சார் ங் கோடு, பீர் ங் கோடு – என்றாற்போல வரும். ஆ ரங் கண்ணி – என ஆர் அம்முப் பெறுதலும், பீர த்த லர் எனப் பீர் அத்துப் பெறுதலும் கொள்க.கூர் ங் கதிர்வேல், ஈர் ங் கோதை, குதிர் ங் கோடு, விலர் ங் கோடு, அயிர் ங் கோடு, துவர் ங் கோடு, சிலிர் ங் கோடு – என்றாற் போல்வன மெல்லெழுத்து மிக்குப்புணர்ந்தனசார் + காழ் = சார்க்காழ் – என வல்லெழுத்து மிகும்.பீர் என்பது அம்முப்பெற்று ‘பீரமொடு பூத்த புதன்மலர்’ என்றாற்போலவும் வரும். (தொ.எ.362-365 நச்.)இனி, அல்வழிக்கண், நீர் குறிது (இயல்பு), வேர் குறிது, வேர்க்குறிது (உறழ்ச்சி);வடசார்க் கூரை, மேல்சார்க் கூரை (வல் லெழுத்துமிக்க மரூஉமுடிவு)- என வருமாறு காண்க.அம்பர் க் கொண்டான், இம்பர் க் கொண்டான், உம்பர் க் கொண் டான், எம்பர் க் கொண்டான் – என ரகரஈற்றுள் ஏழன் பொருள்பட வந்தன வல்லொற்றுப்பெற்றன.தகர் க் குட்டி, புகர் ப் போத்து – என்ற பண்புத்தொகைகள் வல்லெழுத்து மிக்கன. (தொ. எ. 405.நச்.)