யா என்பது அஃறிணைப் பலவின்பால் வினாப்பெயர். அஃது அல்வழிக்கண்இயல்பாயும், வேற்றுமையுருபு ஏற்குமிடத்தும் பொருட்புணர்ச்சிக்கண்ணும்வற்றுச் சாரியை பெற்றும் புணரும்.எ-டு : யா குறிய, சிறிய, தீய, பெரிய; யாவற்றொடு, யாவற் றுக்கு;யாவற்றுக்கோடு, யாவற்றுச் செதிள், யாவற்றுத்தோல், யாவற்றுப்பூ (தொ. எ.224, 175 நச்.)