யா, ஞா போலி

ணகரஈற்றுச் சொற்களையும் னகரஈற்றுச் சொற்களையும் அடுத்து வருமொழியாகயா என்னும் முதலையுடைய வினைச்சொல் வரின், யகரஆகாரத்துக்குப் போலியாகஞகரஆகாரம் (வினைச்சொல் முதலாக) வரும்.எ-டு : மண் யா த்த – மண் ஞா த்த; பொன் யா த்த – பொன் ஞா த்த; யாச் செல்லும்வழி ஞாச் செல்லும், ஞாச் செல்லும்வழியாச்செல்லாது.(மண் ஞான்றது – என்பது மண்யான்றது – என வாராமை காண்க) (தொ. எ. 146நச்.)