யா என் சினை

ஒருசொல்லின் உறுப்பாகும் எழுத்துச் சினையெழுத்து எனப்படும். அதுவேசொல்லின் முதலெழுத்தாக வரின், முதலெழுத்து எனவும் முதனிலை எனவும்முதல் எனவும் கூறப்படும். ஈற்றெழுத்தாக வருவது இறுதி எனப்படும்.குறில் நெடிலாக நீளுதல் சினை நீடல் எனப்படும்.‘யா என்சினைமிசை’ – ‘மியா’ என்பதன்கண் உள்ள யா என்ற எழுத்து. (தொ.எ. 34 நச்.)‘ஐ என் நெடுஞ்சினை’ – ஐ என்ற உறுப்பெழுத்து (தொ.எ.56நச்.)‘சுட்டுச்சினை நீடிய ஐ என் இறுதி’ – அ ‘ஆ’ ஆதல் (தொ.எ. 159)‘சுட்டுச்சினை நீடிய மென்றொடர்மொழி’ – அ ‘ஆ’ ஆதல். (தொ. எ. -427)