யா என்ற சொல் புணருமாறு

யா என்பது வினாப்பெயராகவும், அசைநிலை இடைச் சொல்லாகவும், ஒருமரத்தின் பெயராகவும் வரும்.யா, வினாப்பெயராகவோ மூவிடங்களுக்கும் பொதுவான அசைநிலைஇடைச்சொல்லாகவோ வருங்கால், வருமொழி வன்கணம் வரினும் இயல்பாகப்புணரும்.‘யாது யா யாவை என்னும் பெயரும்’ (சொ.169 நச்.) என, யா – என்றவினாப்பெயரைத் தொல். சுட்டியுள்ளார். ‘யாகா பிற பிறக்கு…அசைநிலைக்கிளவி’ (தொ. பொ. 281 நச்.) என, யா என்ற அசைச்சொல்சுட்டப்பட்டுள்ளது.எ-டு : யா குற்றமுடையன? – வினாச்சொல்யா பன்னிருவர் மாணாக்கர் அகத்தியற்கு – அசை நிலைஇடைச்சொல்இவை வன்கணம் வரினும் இயல்பாகப் புணர்ந்தன.யா என்ற மரப்பெயர் வருமொழி வன்கணத்தொடு புணரும் வழி, அகரமாகியஎழுத்துப்பேறளபெடையும், வருமொழி வல்லினத்துக்கு இனமான மெல்லெழுத்தும்பெற்றுப் புணரும்.எ-டு : யா அங் கோடு, யா அஞ் செதிள், யா அந் தோல், யா அம் பூஅகரப்பேற்றோடு, இனமெல்லெழுத்தேயன்றி வருமொழி வல் லெழுத்துமிகுதலுமுண்டு.எ-டு : யா அக் கோடு, யா அச் செதிள் யா அத் தோல், யா அப் பூஇனி, உருபேற்குமிடத்து அகரமும் மெல்லெழுத்து வல் லெழுத்துஎன்பனவும் பெறாது யாவினை, யாவினொடு – என்றாற் போலப் பெறும்.இன்சாரியையை வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் பெறுவதுண்டு.எ-டு : யாவின்கோடு, செதிள், தோல், பூஅகரப்பேற்றோடு அத்துச்சாரியை பெறுதலுமுண்டு.எ-டு : யாஅத்துக்கோடு, யாஅத்துச்செதிள், யாஅத்துத் தோல்,யாஅத்துப்பூஎழுவாய்த்தொடரில் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.எ-டு : யா கிடந்தது, செறிந்தது, தகர்ந்தது, பிளந்தது, (தொ. எ.229,230 நச். உரை)யா என்ற அஃறிணைப் பலவின்பால் வினாப்பெயர் வன்கணம் வரினும்இயல்பாகப் புணரும். அல்வழி வேற்றுமை என இருவழியும் கொள்க.எ-டு : யா குறிய, சிறிய, தீய, பெரியயா கொணர்ந்தான், சேர்ந்தான், தந்தான், பார்த்தான் (நன்.160)