யாப்பருங்கலம் : பெயர்க் காரணம்

சுருங்கியும் விரிந்தும் கிடந்த தொன்னூல் யாப்புக்களது துணிவுநோக்கி, அரும்பொருட் பெருங்கேள்வி ஆசிரிய வசனங்களைப் பற்றுக்கோடாகக்கொண்டு, அருங்கலஅணி ஒருங்கு கோத்தாற்போலவும், அலைகடல் கடைந்து அமுதுகொண்டாற்போலவும், ஒருங்கு கோத்து ஒரு கோவைப் படுத்து எல்லார்க்கும்உணர்வு புலன்கொள்ளுமாற்றான் யாப்புச்செய்தியை உணர்த்தும் சார்புநூலாதலின் யாப்பருங் கலம் என்னும் பெயர்த்தாயிற்று. (யா. க. பாயிரஉரை)