யானையைப் பற்றிய கிரிசரம் நதிசரம் வனசரம் ஆகிய நிலம், அவயவங்களின்அளவு, ஏழுமுழ உயரம், தருணவயது, பிறந்த நிலத்தான் வீரம் பெறும்குலநன்மை, ஒன்பதுமுழநீளமும் முப்பத்திரண்டு முழச் சுற்றும் உடைத்தாயஇலக்கணம், மும்மதம் கோடல், அடுத்த பொழுதிற் கோறல், அரசனை அறிதல்என்னும் இவையிற்றை வஞ்சிப்பாவால் தொடுத்துப் பாடும் பிரபந்தவகை. (இ.வி. பாட். 112)