யாது : புணருமாறு

யாது என்ற அஃறிணை ஒருமை வினாப்பெயர் அன்சாரியை பெற்று உருபொடுபுணரும். வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண்ணும் இஃது ஒக்கும்.எ-டு : யாது + அன் + ஐ = யாதனை; யாது + அன் + கோடு = யாதன்கோடு(தொ .எ. 200, 422 நச்.)அல்வழியில் வன்கணம் வரினும் யாது என்பது இயல்பாகப் புணரும்.எ-டு : யாது கடிது, சிறிது, தீது, பெரிது (தொ. எ. 425நச்.)