அளவழிச் சந்தங்களுள், நாலடியும் சீர்ஒத்து முதலடியும்நான்காமடியும் எழுத்துக் குறைந்து நடு இரண்டடியும் எழுத்து மிக்குவருவதொரு வகை.எ-டு : ‘மல்லல்மா மழையார்ப்பக்கொல்லைவாய்க் குருந்திளகினமுல்லைவாய் முறுவலித்தனசெல்வர்தேர் வரவுண்டாம்.இவ்வஞ்சித்துறை, முதலடியும் நான்காமடியும் 7 எழுத் துக்கள் வர,இடையிரண்டடியும் 9 எழுத்துக்களாக மிக்கு வந்து, நாலடியும் சீரொத்துவந்தவாறு. (யா. வி. 95 உரை. பக். 515)