ஐம்பத்தாறு தேசங்களுளொன்றும் கிரீசு அரேபியா முதலிய மேலைநாடுகளுள் ஒன்றாகக் கருதப்படுவது மாகிய நாடு. யவனம் தச்சுவினையில் மேம்பட்ட ஒரு தேயமாகத் தெரிகிறது. இந்நாட்டிற்கென்றே தனியாக ஒரு மொழி இருந்த தென்றும் அதில் உதயணன் வாசவதத்தை இருவரும்மிக்க பயிற்சி யுள்ளவர்களென்றும் தங்கள் கருத்தைப் பிறர் அறியாதபடி ஒருவருக்கொருவர் அம்மொழியில் தெரிவித்துக் கொண்டன ரென்றும் தெரிகிறது.
“அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்” (மணிமே. 19;108)
“ஆரியச் செப்பும் யவன மஞ்சிகையும்
பொன் செய் பேழையொடு பொரறித்தாழ் நீக்கி” (பெருங். 32:76 77)