இஃதுஅதிகாரம் என்பதன் இருவகைகளில்ஒன்று. வேந்தன் ஒருவன் இருந்துழிஇருந்து தன் நிலம் முழுவதும் தன் ஆணையின் நடப்பச் செய்வது போல, ஒருசொல் நின்றுழி நின்று பல சூத்திரங்களும் பல ஓத்துக்களும் தன்பொருளேநுதலிவரச் செய்வது யதோத்தேச பக்கமாம். எழுத்தை நுதலி வரும் பலஓத்தினினது தொகுதியை எழுத்ததிகாரம் என்பது யதோத்தேச பக்கமாம் (சூ. வி.பக். 17)