குறித்து வருகிளவியின் முதலாக யகரம் வருமிடத்து, நிலை மொழியீற்றுக்குற்றுகர எழுத்தொலி முற்றும் தோன்றா தொழிய, ஆண்டுக் குற்றியலிகரம்வந்து தனது அரை மாத்திரையினும் குறுகிக் காலாக ஒலிக்கும்.குற்றியலுகரம் யகரமெய்யொடு புணரும் புணர்மொழிக்கண், குற்றியலிகரம்அதற்கு மாற்றெழுத்தாக வரும் என்க.குற்றியலிகரம் குறுகும் இடமும் குறுகா இடமும் பொருள் நோக்கிஉணர்தல் வேண்டும்.ஆடு+ யாது = ஆ டி யாது; கவடு + யாது = கவ டி யாது; தொண்டு + யாது = தொண் டி யாது; இக்குற்றியலிகரம் குறுகி ஒலிக்கும் என்க.தெள்கு + யாது = தெள் கி யாது; வரகு + யாது = வர கி யாதுஇக்குற்றியலிகரம் குறுகாது அரை மாத்திரையே ஒலிக்கும் என்க.‘குற்றியலிகரம் புணரியல் நிலையிடைக் குறுகுதல்’ காண்க. (தொ. எ. 410ச.பால.)