யகரம் ஆவோடு மாத்திரம் முதலாதல்

இ – ஈ – எ – ஏ – க்-களுக்குப் பிறப்பிடமாகிய இடையண்ணமேயகரத்துக்கும் பிறப்பிடம் ஆதலின், மொழி முதற்கண்யி யீ யெ யே – என்பனஒலித்தல் அரிதாகும்போலும். உ ஊ ஒ ஓ ஒள – இதழ் குவியப் பிறப்பன ஆதலின்,இடையண்ணத்தில் பிறக்கும் யகரத்தொடு மொழிமுதற்கண் அவை வருதல்அரிதாயிற்று. யகரஒலி, மிடற்றுச் சேர்ந்த வளி அண்ணம் கண்ணுற்றடையப்பிறப்பதாகலின், யகரத்தை மொழி முதலாக ஒலித்தல் சற்றுக் கடினம் ஆதலின்,யகரம் மொழி முதற்கண் வரும் என்று தொல். கூறவில்லை. யா என்பதன்கண் யகரஒலியினும் வாயை நன்கு அங்காத்தல் செய்யும் ஆகார ஒலியே விஞ்சியிருத்தலின், அது மொழி முதற்கண் வந்தது. எனினும், பிற்காலத்தில்அதுவும் ஒலித்தல் அரிதெனக்கருதி ஆகார மாகவே ஒலிக்கப்பட்டது. யானை யாடுயாண்டு யாறு- என்பன ஆனை ஆடு ஆண்டு ஆறு எனவே பிற்காலத்துப் பயின்றுவருகின்றன. (எ.ஆ.பக்.68)