நிலைமொழி உயிரீற்றதாய் வருமொழி உயிர்முதலதாய் நிகழின், உயிரோடுஉயிர்க்கு மயக்கம் இன்மையின், இரு மொழிகளையும் இணைப்பதற்கு இடையே அவ்வீருயிர் களையும் உடம்படுவிக்கும் மெய்யொன்று வருதல்வேண்டும். வரும்மெய் உயிர்தோற்றுமிடத்திலேயே தோன்றுவதாய் இருத்தல் வேண்டும். உயிர்தோன்றும் மிடற்றொலியில் தோன்றும் மெய்கள் இடையினமெய்களே. அவற்றுள்ளும்உயிர் போல மொழிக்கு முதலில் வரும் ஆற்றலுடையன யகர வகரங்களே. யகரத்தொலிஇ ஈ ஐ – இவற்றின்ஒலியோடு ஒத்ததாயிருத்தலின் இம்மூன்றுஉயிர்ஈறுகளுக்கும் யகரமும், ஏனைய உயிர்கள்ஈற்றுக்கு வகரமும்உடம்படுமெய்களாய் வரும். ஏகாரத்துக்கு இவ்விரண்டு உடம்படுமெய்களும்வந்து பொருந்தும். சிறுபான்மை அளபெடைக்கண் வரும் எகர ஈற்றுக்கும் இஃதுஒக்கும்.எ-டு: விள + வ் +அழகியது – விளவழகியது; கிளி + ய் + அழகியது -கிளியழகியது; சே + அழகியது -சே ய ழகியது, சே வ ழகியது(அவனே ய ழகன் – என ஏகாரஇடைச்சொற்கு யகர உடம்படு மெய்யேவரும்)சேஎ + அழகியது – சேஎயழகியது, சேஎவழகியது(தொ. எ. 140 நச்.), (சூ. வி. பக். 42)‘ளகார வி றுவாய்’ – (தொ. எ. 9 நச்); ‘அவ் வி யல் நிலை யும்’ – 12; ‘ஆ யி ரு திணையின்’ – சொ. 1; ‘ஆ யி ரண் டென்ப’ – எ.117; ‘ஆ வி ன் இறுதி’ – 120; ‘புள்ளியில்லா வெ ல்லாமெய்யும்’ – 17; ‘நொடி யெ ன’ – 7; ‘கூட்டி யெ ழூஉதல்’ – 6; ‘ஈ யா கும்’ – (சொ. 121 சேனா.); ‘உரு வு ரு வாகி’ – (தொ. எ. 17 நச்.); ‘அம் மூ வா றும்’ – 22; ‘ஆ எ ஒ வெ னும்’ – 64; ‘உளவே ய வ்வும்’ – (சொ. 67 சேனா.); ‘மூப்பே ய டிமை’ – 56; ‘உயர்தினைப் பெயரே ய ஃறிணை’ – (எ. 117)இவ்வாற்றால், அ உ ஊ ஒ ஓ ஒள – என்பன வகரமும், இ ஈ ஏ ஐ என்பனயகரமும், ஆ – அவ்விரண்டும் உடம்படுமெய்யாகப் பெறும் என்றறியலாம்.(நிலைமொழியீற்று ஏகாரம் இடைச்சொல்லாயின் யகர உடம்படுமெய்யும்பெயரீற்று ஏகாரமாயின் வகர உடம்படு மெய்யும் பெறும் என்பது ஆன்றோர்வழக்கிற்கண்டது. எ-டு: அவரே ய ரியர், சே வி ன் கோடு; சே – இடபம்)