யகரஇறுதிப் பொதுப்புணர்ச்சி

யகரஈற்றுப் பெயர் அல்வழிக்கண் எழுவாய்த்தொடரில் இயல்பாகப்புணரும்.எ-டு: நாய் கடிது, சிறிது, தீது, பெரிதுஏழன் உருபின் பொருள்பட முடிவன, அவ்வாய்க் கொண் டான் – இவ்வாய்க்கொண்டான் – உவ்வாய்க் கொண்டான் – எவ்வாய்க் கொண்டான் – என வல்லெழுத்துமிக்குமுடியும். அவ்வாய் முதலியன இடப்பெயர்கள்.யகரஈற்று வினையெச்சமும், தாய்க் கொண்டான் -தூய்ப் பெய்தான் – எனவல்லெழுத்து மிக்கு முடியும்.இருபெயரொட்டுப் பண்புத்தொகை, பொய்ச்சொல்-மெய்ச்சொல் – எய்ப்பன்றி -என வல்லெழுத்து மிக்கு முடியும்.வேய் கடிது, வேய்க் கடிது – என எழுவாய்த்தொடருள் உறழ்ந்துமுடிவனவும் உள.யகரஈற்றுப் பெயர் வேற்றுமைப்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின்மிக்கும், ஏனைக் கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும்.எ-டு : நாய்க்கால், நாய்ச்செவி, நாய்நலம், நாய்வால், நாயருமைதாய் என்னும் பொதுப்பெயர் உயர்திணைக்கண் வன்கணம் வரினும்இயல்பாம்.எ-டு : தாய்கை, தாய்செவி, தாய்தலை, தாய்புறம்தாய் என்பதற்கு அடையாக வந்த மகன் செயல் கூறுமிடத்து,மகன்றாய்க்கலாம், மகன்றாய்ச்செரு, மகன்தாய்த்துறத்தல்,மகன்தாய்ப்பகைத்தல் – என வலி மிகும்.வேய்க்குறை, வேய்ங்குறை – என வலி மெலி உறழ்ந்து முடிதலு முண்டு.(தொ. எ. 357 – 361 நச்.)