முதலடியின் முதலெழுத்தே அவ்வடியின் ஈற்றெழுத்தாக, அதுவே அடுத்தஅடிகளிலும் முதலெழுத்தாகவும் ஈற்றெழுத் தாகவும் வரத் தொடுப்பது.எ-டு : ‘ மே னமக் கருளும் வியனருங் கல மே மே வக விசும்பின் விழவொடு வரு மே மே ருவரை அன்ன விழுக்குணத் தவ மே மே வதன் திறநனி மிக்கதென் மன மே ’இப்பாடற்கண், அடிமோனை எழுத்தாகிய ‘மே’ என்பது பாடல் முழுதும்அந்தாதியாக வந்தவாறு. (யா. க. 52 உரை)